செலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)
வழிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் (Guided Media)
1.திருகப்பட்ட கம்பிச்சோடி / முறுக்கிய கம்பிச்சோடி (Twisted Pair)
திருகப்பட்ட கம்பிச்சோடி என்பது ஒன்றுடனொன்று திருகப்பட்டிருக்கும் இரு கம்பிச்சோடிகளாகும். ஒரு ஒழுங்கான திருகு சுருள், முன் வரைவிலுள்ள காவலிடப்பட்ட இரு செப்புக்கம்பிகளாகும். ஒரு தனித்த தொடர்பாடல் இணைப்பாக கருதப்படும். புதிய LAN (உள்ளகவலைபரப்பு) இன் பயனுறுனிலை இணைப்புக்களுக்காக விரும்பப்படும் பிரபல்யமான ஒன்றாக திருகப்பட்ட கம்பிச்சோடி கணப்படுகிறது.
செலுத்தல் குணம்சங்களின்படி இரு வகையான திருகப்பட்ட கம்பிச்சோடிகள் காணப்படுகின்றன.
கவசமிடப்பட்ட திருகப்பட்ட கம்பிச்சோடி (Shielded Twisted Pair – STP)
கவசமிடப்படாத திருகப்பட்ட கம்பிச்சோடி(Unshielded Twisted Pair – UTP)
அனுகூலங்கள்
விலை அதிகமற்றது
இலகுவாக கிடைக்கா கூடியது
பெரும்பாலான தொலைபெசிதொகுதியில் காணப்படுகிறது.
பிரதிகூலங்கள்
ஏனைய ஊடகங்களைபோல் (ஓரச்சு வடம்)உயர்கதியை கொண்டிறாது.
வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் குறுக்கீடுகளை உணர்திறனுடயது.
ஏனைய ஊடகங்களைபோல் (ஓரச்சு வடம்) நீடித்து உழைக்காது.
2.ஓரச்சு வடம் (Co – axial Cable)
இந்த வடமானது ஓரு மைய அச்சுக்கானது என கூறப்படும். ஏனெனில்
ஓர் பொதுவான அச்சினையே இரண்டு கடத்திகளும் பகிர்ந்து கொள்ளும். இது ஒரு ஒற்றை உள்ளகத்தையும் அதன் மேற்போர்வையாக செயற்படும் வெளியக கட்த்தியாகவும் இருக்கிறது. சமிக்ஞையானது உள்ளகத்தின் மீது பரப்பப்படும். உள்ளகம் மற்றும் வெளியகம் ஒரு காவலியினால் தனியாக்கப்பட்டுள்ளன.
அனுகூலங்கள்
வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் கொஞ்சம் எதிர்ப்பானது.
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட நீடித்து உழைக்க கூடியது.
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட கதியை கொண்டது.
பிரதிகூலங்கள்
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட விலை கூடியது
கடுமையான குறுக்கீடுகளை உணர்திறனுடயது.
3.ஒளியிழை நார் (Fiber Optics)
இவை ஒரு மெல்லிய கண்ணாடி அல்லது பிளாஷ்டிக் இழைநார்கள் ஊடாக தரவைச் செலுத்துவதற்கு ஒளியலைகளை பயன்படுத்துகின்றன. இது ஒளிக்கீற்றுகளின் செலுத்துகை துடிப்புகளிலுள்ள நூற்றுக்கணக்கான கண்ணடி அல்லது பிளஷ்டிக் கம்பிகளை கொண்டதாகும்.
fiber optics
அனுகூலங்கள்
வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் என்பவற்றிற்கு எதிர்ப்பானது.
உயர்ந்த பாதுகாப்பு தன்மை உடையது
மிகவும் நீடித்து உழைக்க கூடியது.
பிரதிகூலங்கள்
உற்பத்தி சேவையை பொறுத்தமட்டில் மிக மிக செலவு கூடியது.
அமைப்பு ஏற்பாடு வடிவமைப்பு என்பவை மிகவும் சிக்கலானவை.
வழிப்படுத்தப்படாத ஊடகங்கள் (Unguided Media) /கம்பியில்லா ஊடகங்கள் (Wireless Media)
பெளதீகரீதியான வடமாக்கல் போன்ற கட்டுப்பாடுகளுடனல்லாது வலையமைப்புக்களில் தரவுகளை தொடர்பாட முடியும் என்ற் கனவு உண்மையென்பதை உணரலாம். இவை கம்பியில்லாத தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.இரு பிரதான கம்பியில்லாத தொழில்நுட்பங்களாக வனொலி செலுத்துகை, செங்கீழ்கதிர் செலுத்துகை என்பன காணப்படுகின்றன.
1.வானொலி செலுத்துகை
இவை இல்குவாக ஊடுருவிச்செல்லக்கூடியது. வானொலியானது அதன் கதியால் வரையரை செய்யப்பட்டிருந்தும் பல மேல் கணனிகளுக்கான தெரிவு முறையாகவுள்ள கம்பியில்லா செலுத்துகையாகும்.
2.செங்கீழ்கதிர் செலுத்துகை
இவை மிக குறைந்த மீடிறனை கொண்ட ஒளியலைகளை தரவு ஊடுகடத்துவதற்கு பயன்படுத்தாலாம். இவை சுவர் தளங்களை ஊடுருவிச்செல்ல முடியாது. இன்று நாண் இல்லாத விசைபலகை, அச்சுயந்திர்ம் என்பவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.
3.நுண்ணலை செலுத்துகை
நீண்ட தூரத்துக்கான தரவுகளை ஊடுகடத்துவதற்கு பயன்படும். இது ஒரு குறுகிய அலை நீளம் கொண்ட அதிர்வெண் கதிராகும்.
4.செய்மதி மூலமான செலுத்துகை
செய்மதி மூலமான செலுத்துகைகளுக்கான சமிக்ஞைக்ள் ஆகாயவெளியில் 500 – 22000 வரையிலான உயரத்தில் உள்ள செய்மதிகளுக்கு அனுப்பப்படும்
No comments:
Post a Comment