1) தேவையான சொற் தொடரில் மட்டும் தேடுவதற்கு மேற்கோள் குறிகளை (” “) பயன்படுத்தவும்
உதாரணமாக தகவல் தொழில்நுட்பம் எனத் தேடினால் தகவல் வேறாகவும், தொழில் வேறாகவும், நுட்பம் வேறாகவும் விடை வரலாம். ஆனால்
“தகவல் தொழில்நுட்பம்”
என டைப் செய்தால் தகவல் தொழில் நுட்பம் என்ற சொற் தொடர் கூட்டாக உள்ள விடை மாத்திரம் வரும்
2) சொற் தொடரில் அல்லது தேடலில் ஒரு குறிப்பிட்ட சொல்லை தவிர் பதற்கு கழித்தல் குறியீட்டை (-) பயன்படுத்தவும்
உதாரணமாக தகவல் தொழில்நுட்பம் எனும் தேடலில் விஞ்ஞானம் எனும் சொல் தேவையில்லை எனின்
தகவல் தொழில்நுட்பம் -விஞ்ஞானம்
என டைப் செய்து தேடவும்
3) வரைவிலக்கணங்களை தேடுவதற்கு define: என்பதை உபயோகிக்கவும்
உதாரணமாக education
என்பதற்கு வரைவிலக்கணம் தேட
define:education
என தேடவும்
4) ஒரே வெப்சைட்டில் தேடுவதற்கு site: in என்பதை உபயோகிக்கவும்
உதாரணமாக http://download-mp3s.blogspot.com இல் பாடலை தேடுவதற்கு
site:http://download-mp3s.blogspot.com in பாடல்
என தேடவும்
5) குறிப்பிட்ட file type இல் தேடுவதற்கு filetype: என்பதை உபயோகிக்கவும்
உதாரணமாக கணனியின் வகைகளை pdf வடிவில் தேடுவதற்கு
கணனியின் வகைகள் filetype:pdf
எனத் தேடவும்
6) ஒத்த வெப்சைட்டுகள் அல்லது சார்ந்த வலை தளங்களை தேடுவதற்கு related: என்பதை உபயோகிக்கவும்
உதாரணமாக www.google.com இற்கு ஒத்த வலை தளங்களை தேடுவதற்கு
related:https://www.google.com
எனத் தேடவும்
7) கூகுளில் கணித செயற்பாடுகளை செய்ய (calculator ஆக உபயோகிக்க) கூகுள் தேடலில் நேரடியாக டைப் செய்யவும்
உதாரணமாக 50 ஐ 10 ஆல் பெருக்கி பின் 5 ஆல் பெருக்கி 20ஆல் வகுக்க
50*10*5/20
என டைப் செய்தால் விடையுடன் calculator உம் வரும்
8) நாணய மாற்று வீதம் அல்லது வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களை அறிந்து கொள்ள
usd in lkr அல்லது gbp in lkr அல்லது omr in lkr
என டைப் செய்யவும்
9) ஏனைய மாற்று வீதங்களை அல்லது கணியங்களை மாற்றுவதற்கு இடையில் in என்பதை பயன்படுத்தவும்
1 km in miles
1 c in f
5 kg in g
என அனத்து வகை கணிய மாற்றிடுகளையும் செய்யலாம்
No comments:
Post a Comment