Friday, May 9, 2014

செலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)

செலுத்துகை ஊடகங்கள் (Transmission Media)

வழிப்படுத்தப்பட்ட ஊடகங்கள் (Guided Media)

1.திருகப்பட்ட கம்பிச்சோடி / முறுக்கிய கம்பிச்சோடி (Twisted Pair)

திருகப்பட்ட கம்பிச்சோடி என்பது ஒன்றுடனொன்று திருகப்பட்டிருக்கும் இரு கம்பிச்சோடிகளாகும். ஒரு ஒழுங்கான திருகு சுருள், முன் வரைவிலுள்ள காவலிடப்பட்ட இரு செப்புக்கம்பிகளாகும். ஒரு தனித்த தொடர்பாடல் இணைப்பாக கருதப்படும். புதிய LAN (உள்ளகவலைபரப்பு) இன் பயனுறுனிலை இணைப்புக்களுக்காக விரும்பப்படும் பிரபல்யமான ஒன்றாக திருகப்பட்ட கம்பிச்சோடி கணப்படுகிறது.

செலுத்தல் குணம்சங்களின்படி இரு வகையான திருகப்பட்ட கம்பிச்சோடிகள் காணப்படுகின்றன.

கவசமிடப்பட்ட திருகப்பட்ட கம்பிச்சோடி (Shielded Twisted Pair – STP)
கவசமிடப்படாத திருகப்பட்ட கம்பிச்சோடி(Unshielded Twisted Pair – UTP)
அனுகூலங்கள்

விலை அதிகமற்றது
இலகுவாக கிடைக்கா கூடியது
 பெரும்பாலான தொலைபெசிதொகுதியில் காணப்படுகிறது.
பிரதிகூலங்கள்

 ஏனைய ஊடகங்களைபோல் (ஓரச்சு வடம்)உயர்கதியை கொண்டிறாது.
 வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் குறுக்கீடுகளை உணர்திறனுடயது.
ஏனைய ஊடகங்களைபோல் (ஓரச்சு வடம்) நீடித்து உழைக்காது.

2.ஓரச்சு வடம் (Co – axial Cable)

இந்த வடமானது ஓரு மைய அச்சுக்கானது என கூறப்படும். ஏனெனில்
ஓர் பொதுவான அச்சினையே இரண்டு கடத்திகளும் பகிர்ந்து கொள்ளும். இது ஒரு ஒற்றை உள்ளகத்தையும் அதன் மேற்போர்வையாக செயற்படும் வெளியக கட்த்தியாகவும் இருக்கிறது. சமிக்ஞையானது உள்ளகத்தின் மீது பரப்பப்படும். உள்ளகம் மற்றும் வெளியகம் ஒரு காவலியினால் தனியாக்கப்பட்டுள்ளன.


அனுகூலங்கள்

 வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் கொஞ்சம் எதிர்ப்பானது.
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட நீடித்து உழைக்க கூடியது.
திருகப்பட்ட கம்பிச்சோடியை விட கதியை கொண்டது.
பிரதிகூலங்கள்

திருகப்பட்ட கம்பிச்சோடியை விட விலை கூடியது
கடுமையான குறுக்கீடுகளை உணர்திறனுடயது.

3.ஒளியிழை நார் (Fiber Optics)

இவை ஒரு மெல்லிய கண்ணாடி அல்லது பிளாஷ்டிக் இழைநார்கள் ஊடாக தரவைச் செலுத்துவதற்கு ஒளியலைகளை பயன்படுத்துகின்றன. இது ஒளிக்கீற்றுகளின் செலுத்துகை துடிப்புகளிலுள்ள நூற்றுக்கணக்கான கண்ணடி அல்லது பிளஷ்டிக் கம்பிகளை கொண்டதாகும்.

fiber optics

அனுகூலங்கள்

வனொலி அதிர்வெண், மின் கந்தவியல் அதிர்வெண் என்பவற்றிற்கு  எதிர்ப்பானது.
உயர்ந்த பாதுகாப்பு தன்மை உடையது
மிகவும் நீடித்து உழைக்க கூடியது.
பிரதிகூலங்கள்

 உற்பத்தி சேவையை பொறுத்தமட்டில் மிக மிக செலவு கூடியது.
 அமைப்பு ஏற்பாடு வடிவமைப்பு என்பவை மிகவும் சிக்கலானவை.


வழிப்படுத்தப்படாத ஊடகங்கள் (Unguided Media) /கம்பியில்லா ஊடகங்கள் (Wireless Media)

பெளதீகரீதியான வடமாக்கல் போன்ற கட்டுப்பாடுகளுடனல்லாது வலையமைப்புக்களில் தரவுகளை தொடர்பாட முடியும் என்ற் கனவு உண்மையென்பதை உணரலாம். இவை கம்பியில்லாத தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின்றன.இரு பிரதான கம்பியில்லாத தொழில்நுட்பங்களாக வனொலி செலுத்துகை, செங்கீழ்கதிர் செலுத்துகை என்பன காணப்படுகின்றன.

1.வானொலி செலுத்துகை

இவை இல்குவாக ஊடுருவிச்செல்லக்கூடியது. வானொலியானது அதன் கதியால் வரையரை செய்யப்பட்டிருந்தும் பல மேல் கணனிகளுக்கான தெரிவு முறையாகவுள்ள கம்பியில்லா செலுத்துகையாகும்.


2.செங்கீழ்கதிர் செலுத்துகை

இவை மிக குறைந்த மீடிறனை கொண்ட ஒளியலைகளை தரவு ஊடுகடத்துவதற்கு பயன்படுத்தாலாம். இவை சுவர் தளங்களை ஊடுருவிச்செல்ல முடியாது. இன்று நாண் இல்லாத விசைபலகை, அச்சுயந்திர்ம் என்பவற்றில் இது பயன்படுத்தப்படுகிறது.


3.நுண்ணலை செலுத்துகை

நீண்ட தூரத்துக்கான தரவுகளை ஊடுகடத்துவதற்கு பயன்படும். இது ஒரு குறுகிய அலை நீளம் கொண்ட அதிர்வெண் கதிராகும்.


4.செய்மதி மூலமான செலுத்துகை

செய்மதி மூலமான செலுத்துகைகளுக்கான சமிக்ஞைக்ள் ஆகாயவெளியில் 500 – 22000 வரையிலான உயரத்தில் உள்ள செய்மதிகளுக்கு அனுப்பப்படும்

கூகுளில் முறையாக தேடுவது எப்படி?

1)  தேவையான சொற் தொடரில் மட்டும் தேடுவதற்கு மேற்கோள் குறிகளை (” “) பயன்படுத்தவும்

உதாரணமாக தகவல் தொழில்நுட்பம் எனத் தேடினால் தகவல் வேறாகவும், தொழில் வேறாகவும், நுட்பம் வேறாகவும் விடை வரலாம். ஆனால்

“தகவல் தொழில்நுட்பம்”

என டைப் செய்தால் தகவல் தொழில் நுட்பம் என்ற சொற் தொடர் கூட்டாக உள்ள விடை மாத்திரம் வரும்


2) சொற் தொடரில் அல்லது தேடலில் ஒரு குறிப்பிட்ட சொல்லை தவிர் பதற்கு கழித்தல் குறியீட்டை (-) பயன்படுத்தவும்

உதாரணமாக தகவல் தொழில்நுட்பம் எனும் தேடலில் விஞ்ஞானம் எனும் சொல் தேவையில்லை எனின்

தகவல் தொழில்நுட்பம் -விஞ்ஞானம்

என டைப் செய்து தேடவும்


3) வரைவிலக்கணங்களை தேடுவதற்கு define: என்பதை உபயோகிக்கவும்

உதாரணமாக education

என்பதற்கு வரைவிலக்கணம் தேட

define:education

என தேடவும்


4) ஒரே வெப்சைட்டில் தேடுவதற்கு site: in என்பதை உபயோகிக்கவும்

உதாரணமாக http://download-mp3s.blogspot.com இல் பாடலை தேடுவதற்கு

site:http://download-mp3s.blogspot.com in பாடல்

என தேடவும்


5) குறிப்பிட்ட file type இல் தேடுவதற்கு  filetype: என்பதை உபயோகிக்கவும்

உதாரணமாக கணனியின் வகைகளை pdf வடிவில் தேடுவதற்கு

கணனியின் வகைகள்  filetype:pdf

எனத் தேடவும்


6) ஒத்த வெப்சைட்டுகள் அல்லது சார்ந்த வலை தளங்களை தேடுவதற்கு related: என்பதை உபயோகிக்கவும்

உதாரணமாக www.google.com இற்கு ஒத்த வலை தளங்களை தேடுவதற்கு

related:https://www.google.com

எனத் தேடவும்


7) கூகுளில் கணித செயற்பாடுகளை செய்ய (calculator ஆக உபயோகிக்க) கூகுள் தேடலில் நேரடியாக டைப் செய்யவும்

உதாரணமாக 50 ஐ 10 ஆல் பெருக்கி பின் 5 ஆல் பெருக்கி 20ஆல் வகுக்க

50*10*5/20

என டைப் செய்தால் விடையுடன் calculator உம் வரும்


8) நாணய மாற்று வீதம் அல்லது வெளிநாட்டு நாணய மாற்று வீதங்களை அறிந்து கொள்ள

usd in lkr அல்லது gbp in lkr அல்லது omr in lkr

என டைப் செய்யவும்


9) ஏனைய மாற்று வீதங்களை அல்லது கணியங்களை மாற்றுவதற்கு இடையில் in என்பதை பயன்படுத்தவும்

1 km in miles
1 c in f
5 kg in g

என அனத்து வகை கணிய மாற்றிடுகளையும் செய்யலாம்

தரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)

தரவு ஊடுகடத்தும் முறைகள் (Data Transmission Types)

தரவு ஊடுகடத்தல் இரு பிரதானமுறையில் நடைபெறலாம்.

தொடர் தரவு ஊடுகடத்தல் (Serial Data Transmission): இங்கு தரவுகள் ஒன்றன் பின் ஒன்று வீதம் ஊடுகடத்தப்படுகின்றன. கணினி வலையமைப்பில் இவ்வாறு தரவுகள் பிட்(bit)களாக ஊடுகடத்தப்படும்.

சமாந்திர தரவு ஊடுகடத்தல்  (Parallel Data Transmission):     ஓரே தடவையில் அதிக எண்ணிக்கையிலான பிட்கள்   ஊடுகடத்தப்படும்.   இதற்கு  குறைந்தப்பட்சம் 8 கம்பிகளையேனும் பயன்படுத்துவது வழக்கம்.

தரவு ஊடுகடத்தல் கதி( Data Transmission Speed)

பிட்களை (bit) கொண்டு தரவு ஊடுகடத்தலின் கதியை அளப்பதற்கு ஒரு செக்கனில் ஊடுகடத்தப்படும் பிட்களின் எண்ணிக்கை (bit per second –bps) கருத்தில் கொள்ளப்படும். Kbps, Mbps, Gbps அலகுகளும் தரவு ஊடுகடத்தலின் கதியை அளப்பதற்கு பயன்படுத்தப்படும்.


தரவு ஊடுகடத்தல் வழிமுறைகள் ( Data Transmission Modes)

தரவு ஊடுகடத்தல் பிரதானமாக மூன்று வழிகளில் நடைபெறும்.

ஒற்றை வழிப்போக்கு (Simplex) : தரவு ஒரு திசையில் மாத்திரம் செல்கிறது. மற்றைய திசையில் தரவு ஊடுகடத்தப்பட எவ்வித வாய்ப்பும் இல்லை
அரை இருவழிப்போக்கு(Half-Duplex): இரு திசைகளிலும் தரவுகளை ஊடுகடத்துவதற்காக இருக்கின்றபோதிலும் ஒரு தடவையில் ஒரு திசையில் மாத்திரம் ஊடுகடத்தத்தக்க தரவு ஊடுகடத்தல் முறை அரை இருவழிப்போக்கு தரவு ஊடுகடத்தல் எனப்படும்
இருவழிப்போக்கு (Full Duplex):   ஒரே சந்தர்ப்பத்தில் இரு திசைகளிலும் தரவு ஊடுகடத்தல் நடைபெறத்தக்க தரவு ஊடுகடத்தல் முறை இருவழிப்போக்கு தரவு ஊடுகடத்தல் எனப்படும்

Tags:-
Serial Data Transmission
Parallel Data Transmission
Data Transmission Modes
Simplex
Half-Duplex
Full Duplex

கணினி நினைவகம்


தரவுகள், தகவல்கள், அறிவுறுத்தல்கள் போன்றவற்றைப் பதிந்துவைக்கப் பயன்படும் கணினியின் பகுதி நினைவகம் என அழைக்கப்படுகின்றது. கணினிகள் இலத்திரனியல் முறையில் தரவுகளைச் சேமிக்கின்றன. இச்செயற்பாடுகள் மின்துடிப்புக்களை உணரும் சுற்றுக்கள் மூலம் நடைபெறுகின்றன.

பிரதான நினைவகம் (PRIMARY MEMORY)

தற்காலத்தில் chips இனால் உருவாக்கப்பட்ட பிரதான நினைவகம் நினைவகம் semiconductor memory ஆகியவற்றில் memory chips IC வடிவங்களிலேயே காணப்படுகின்றன. மிகச்சிறிய பகுதியினுள் பலநூறு இலத்திரனியல் பகுதிதிகளைக்கொண்ட சுற்றுக்கள் IC என அழைக்கப்படுகின்றன.

கணினி பிரதான நினைவகத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

RAM  (Random Access Memory – நிலையா நினைவகம்)
வாசிப்பதற்கும் பதிவதற்குமான நினைவகமாகும். இங்கு கணினியானது off ஆகும்போது இந்த நினைவகத்தில் பதிந்துவைத்திருந்தவை யாவும் அழிந்துவிடும்.

 ROM  (Read Only Memory – அழியா நினைவகம்)
இந்நினைவகத்தில் பதிந்துள்ளவற்றை வாசிக்கமட்டுமே முடியும். இதிலுள்ளவற்றை அழிக்கவோ அல்லது மாற்றம் செய்யவோ முடியாது

ROM  இன் வகைகள்

PROM (Programmable ROM)
EPROM (Erasable Programmable ROM)
EAPROM (Electrically Alternate Programmable ROM)

துணை நினைவகம் (SECONDARY MEMORY OR AUXILIARY MEMORY)

இங்கு பதியப்படுபவை அழியாமல் நிரந்தரமாக இருப்பதனால் இது NonVolatile Memory என அழைக்கப்படுகின்றது. அதாவது CPU  ஆனது இயங்காமல் off நிலைக்கு வந்தாலும் இதில் பதியப்பட்டுள்ளவை அழிந்துபோகாது. இது Main Memory ஐ விட வேகம் குறைந்தது

அவையாவன:

Magnetic

 Magnetic Tape : இது சாதாரணமான ஒலிப்பதிவு நாடாவில் பாடல்களைப் பதிவதுபோலவே தரவுகளைப் பதிகின்றது. இச் சாதனம் கணினியிலுள்ள தகவல், தரவுகளை சேமித்து வைப்பதற்கு (Backup) பயன்படுத்தப்படுகிறது.
Floppy Disk : இது ஒரு Magnetic Disk ஆகும். இதில் இரண்டு வகையுண்டு. அவையாவன :
5.25” (B) Floppy
3.50” (A) Floppy
 Magnetic & Optical 

Floptical Disk : காந்தவியல் தொழினுட்பம், லேசர் தொழினுட்பம் ஆகிய இரண்டு தொழினுட்பங்களையும் பயன்படுத்தித் தகவல்கள் பதியப்படும் Disk, Floptical Disk என அழைக்கப்படுகின்றது. இதனது கொள்ளளவு 20 Mega Bytes இனைவிட அதிகமானதாகும். இதனளவு 3.5” ஆக இருந்தாலும் இதற்குத் தனியான Drive தேவை.
Optical 

Optical Disk: இவ்வகை disk களில் தரவுகளைப் பதிவதற்கும் வாசிப்பதற்கும் Laser தொழினுட்பம் பயன்படுத்தப்படுகின்றது.


Tags:-
PRIMARY MEMORY
RAM - Random Access Memory 
SECONDARY MEMORY OR AUXILIARY MEMORY
Magnetic
Floptical Disk 
Optical Disk

உள்ளீட்டு,வெளியீட்டுச்சாதனங்கள்

உள்ளீட்டுச் சாதனங்கள் (INPUT DEVICES)

தரவுகளையும் நிகழ்ச்சித்திட்ட அறிவுறுத்தல்களையும் கணினியினுள் அனுப்பப் பயன்படும் சாதனங்கள் யாவும் உள்ளீட்டுப் பகுதி அல்லது உள்ளீட்டுச் சாதனங்கள் என அழைக்கப் படுகின்றன.

உள்ளீட்டுச்சாதனங்கள் :




வெளியீட்டுச்சாதனங்கள் (OUTPUT DEVICES)

கணினியினால் Process செய்யப்பட்ட பெறுபேறுகளைப் பாவனையாளருக்கு வழங்கப் பயன்படும் சாதனங்கள் யாவும் வெளியீட்டுப் பகுதி அல்லது வெளியீட்டுச் சாதனங்கள் என அழைக்கப்படுகின்றன.

வெளியீட்டுச்சாதனங்கள் :



Tags:-
Input Devices
Output Devices

கணினியின் கட்டமைப்பு



CPU இன் பிரதான தொழிற்பாடுகள்

நடைபெறவேண்டிய தொடர்ச்சியான தொழிற்பாடுகளை, நினைவகத்தில் சேமிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களின் அடிப்படையில் கட்டுப்படுத்துகின்றது.

உள்ளீட்டுத்தொகுதியினால் அனுப்பப்படும் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் அதனுடைய பிரதான நினைவகத்தில் (ஆயin ஆநஅழசல இல்) சேமிக்கின்றது.

கணினியின் சகல பகுதிகளுக்குமான கட்டளைகளை வழங்குகின்றது.

தரவுகள் செயன்முறைப்படுத்தப்பட்டுவரும் விளைவுகளை வெளியீட்டுத் தொகுதியிற்கு அனுப்புகின்றது.


கட்டுப்பாட்டுத்தொகுதி (CONTROL UNIT)

இது கணினியில் மிக முக்கியமான பகுதியாகும். இது கணினியின் ஏனைய பாகங்களைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒருங்கிணைத்தல் போன்ற செற்பாடுகளை மேற்கொள்கின்றது.

கட்டுப்பாட்டுத் தொகுதியினால் நிறைவேற்றப்படும்  செயற்பாடுகள்

உள்ளீட்டு சாதனங்களிலிருந்துவரும் தரவுகளையும் அறிவுறுத்தல்களையும் ஏற்றுக்கொள்கின்றது. பின்னர் அவற்றினை நினைவகத்தில் சேமித்து தேவை யானபோது எடுப்பதற்கான கட்டளையைப் பிறப்பிக்கிறது.

கொடுக்கப்படும் நிகழ்ச்சித்திட்டங்களின் அறிவுறுத்தல்களுக்கான கட்டளை களைக் கணினியின் ஏனைய பகுதிகளுக்கு அனுப்புகின்றது.

கணித மற்றும் தர்க்கரீதியான செயற்பாடுகளுக்குரிய கட்டளைகளை வழங்கு கின்றது.

மற்றைய எல்லாப் பகுதிகளுக்குரிய கட்டளைகளை அனுப்புவதன்மூலம் அவற்றைக் கட்டுப்படுத்தி, ஒருங்கிணைக்கின்றது.


எண்கணித மற்றும் தர்க்கரீதியான தொகுதி (ARITHMATIC AND LOGIC UNIT)

இது பிரதானமாக இரண்டு தொழிற்பாடுகளை மேற்கொள்கின்றது.

கணிதச் செயற்பாடுகளைச் செய்வதுடன் அதன் பெறுபேறுகளை நினைவகத்திற்கு அனுப்புகின்றது.

தர்க்கரீதியான தொழிற்பாடுகளைச் செய்கின்றது

Tags:-
CPU 
INPUT UNIT
CONTROL UNIT
ARITHMATIC AND LOGIC UNIT
OUTPUT UNIT

கணனியின் வகைகள்

பருமன் அடிப்படையில் (According to Size)

Super Computers
Main Frame Computer
Mini Computer
Micro Computer
Desktop Computer
Lap Top Computer (Note Book)
Palmtop Computer
Pocket Computer

பயன்படுத்தப்படும் தொழிநுட்பத்தின் அடிப்படையில் (According to Technology)

Analog: ஆய்வுகூடங்களில் பயன்படுத்தப்படுகிறது.
Digital:  பொதுவான பயன்பாட்டில் உள்ளவை.
Hybrid: ஆராய்ச்சிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

பாவனையின் அடிப்படையில்

Special   Purpose (Super Computer)
General Purpose (Personal Computer)

பருமன் அடிப்படையில் வகைப்படுத்தல்
Super Computers

பெரிய அளவிலான தரவுகளை செயற்படுத்த பயன்படுத்தப்படும் கணனிகளாகும். இவை மிகவும் சக்திவாய்தவை. அளவும் செலவும் அதிகமாக காணப்படுவதால் குறைந்தளவிலே பயன்பாட்டில் உள்ளன. இவை காலநிலை, புவியல் ஆராய்ச்சி போன்ற விஞ்ஞானரீதியான தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

Main Frame Computer

Network இல் பல நூறு கணினிகளுக்குத் தலைமைக் கணினியாக செயற்படும் கணினியே Main Frame எனப்படுகிறது. இது பருமனில் மிகவும் பெரியதாகவும், வேகமானதாகவும் கூடிய கொள்ளளவு உடையதாகவும் இருக்கும்.
இது 20ம் நூற்றாண்டில் பொதுத் தேவை (General Purpose) நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது.

Tags:-
Super Computers
Main Frame Computer
Mini Computer
Micro Computer
Desktop Computer
Lap Top Computer
Palmtop Computer
Pocket Computer
Main Frame Computer
According to Technology
Hybrid
Digital
Analog